கோர்கா பட போஸ்டரில் தவற்றைச் சுட்டிக்காட்டிய முன்னாள் ராணுவ அதிகாரி: திருத்திக்கொள்வதாக உறுதியளித்த அக்‌ஷய் குமார்

By செய்திப்பிரிவு

வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட புதிய பட போஸ்டரில் தவறு ஒன்றைக் கண்டுபிடித்து முன்னாள் ராணுவ அதிகாரி சுட்டிக்காட்டியதற்கு நன்றி தெரிவித்ததோடு அதனை படத்தில் திருத்திக்கொள்வதாக உறுதியளித்துள்ளார் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

அக்‌ஷய் குமார் தற்போது பாலிவுட்டில் 'பெல் பாட்டம்' படத்தைத் தொடர்ந்து 'சூர்யவன்ஷி', 'அத்ரங்கி ரே', 'பிரித்விராஜ்', 'பச்சன் பாண்டே', 'ரக்‌ஷா பந்தன்', 'ராம் சேது', 'மிஷன் சிண்ட்ரெல்லா', 'ஓ மை காட் 2' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதில் நவம்பர் 5-ம் தேதி 'சூர்யவன்ஷி' திரைப்படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து, அக்‌ஷய் குமார் நடிக்கவுள்ள அடுத்த படமான 'கோர்கா' ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது. 1971 இந்தியா பாகிஸ்தான் போரில் ஈடுபட்டு வெற்றியை ஈட்டித்தந்த மேஜர் அயன் கார்டோசோவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிறது. இந்தப் படத்தை தேசிய விருது வென்ற சஞ்சய் செளகான் இயக்கவுள்ளார்.

வெள்ளிக்கிழமை, இரண்டு போஸ்டர்கள் வெளியானவுடன், முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவர் அக்ஷயக்குமாரை குறிப்பிட்டு, போஸ்டரில் உள்ள தவற்றை தனது ட்விட்டர் சுட்டிக்காட்டினார்.

அதில் ஒரு போஸ்டரில் அக்ஷய் கூர்மையான 'குக்ரி' எனப்படும் ஒரு வளைந்த கத்தி வைத்திருப்பார்.

இதுகுறித்து தவற்றைச் சுட்டிக்காட்டிய முன்னாள் கூர்க்கா அதிகாரி, மேஜர் மாணிக் எம் ஜாலி, ''போஸ்டரில் காட்டப்பட்டுள்ளதை விட 'குக்ரி' எனப்படும் ஒரு வளைந்த கத்தி விட வித்தியாசமானதாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தனது ட்விட்டர் ராணுவ அதிகாரி மேஜர் மாணிக் எம் ஜாலி கூறியதாவது:

“அன்புள்ள @அக்‌ஷய் குமார் , ஒரு முன்னாள் கூர்கா அதிகாரியாக, இந்த திரைப்படத்தை உருவாக்கிய உங்களுக்கு என் நன்றி. எனினும், விவரங்கள் முக்கியம். தயவுசெய்து குக்ரியை சரியாக பிடியுங்கள்.

கூர்மையான விளிம்பு மறுபுறம் உள்ளது. அது வாள் அல்ல. குக்ரி பிளேட்டின் உள் பக்கத்திலிருந்து தாக்குகிறது. குக்ரி கத்தி படம் இணைத்துள்ளேன். நன்றி."

இவ்வாறு மேஜர் மாணிக் எம் ஜாலி தெரிவித்துள்ளார்.

இதற்க பதிலளித்து அக்‌ஷய் குமார் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:

“அன்புள்ள மேஜர் ஜாலி, இதைச் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி. படப்பிடிப்பின் போது நாங்கள் இதில் மிகவும் கவனமாக இருப்போம். கோர்கா தயாரிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். யதார்த்தத்திற்கு மிக நெருக்கமான எந்த ஆலோசனைகளும் மிகவும் பாராட்டுக்குரியதுதான்.''

இவ்வாறு அக்ஷயக் குமார் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE