'மதுபான கடை' இயக்குநரின் புதிய படம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

'மதுபான கடை' இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கவுள்ள புதிய படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

‘மதுபான கடை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கமலக்கண்ணன். அரசியலை நையாண்டி செய்யும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. ரஃபீக், ஐஸ்வர்யா, என்.டி.ராஜ்குமார், ‘பூ’ ராமு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். வேத் சங்கர் இசையமைத்தார். 2012-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது.

இந்தப் படம் விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யா ரவி நடித்துள்ள படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்துக்குப் பிறகு கமலக்கண்ணன் இயக்கவுள்ள படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 'குரங்கு பெடல்' எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்துக்கு ஜிப்ரான் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார். இந்தப் படம் இயக்குநர் ராசி அழகப்பனின் சிறுகதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகிறது.

இதில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது அறிவிக்கப்படவில்லை. இதற்கு ஒளிப்பதிவாளராக சுமீ பாஸ்கரன், எடிட்டராக சிவாநந்தீஸ்வரன் ஆகியோர் பணிபுரியவுள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்