'தளபதி 66' படத்தில் விஜய்க்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த 'பைரவா', 'சர்கார்' படங்களில் நாயகியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அதற்குப் பிறகு விஜய் - கீர்த்தி சுரேஷ் கூட்டணி இணைந்து நடிக்கவில்லை. தற்போது 'பீஸ்ட்' படத்தைத் தொடர்ந்து வம்சி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய்.
தில் ராஜு தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கவுள்ளது. இதில் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தமிழ் - தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாவதால், நாயகியாக கீர்த்தி சுரேஷ் பொருத்தமாக இருக்கும் என்று கருதியுள்ளது படக்குழு. ஆனால், இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. விரைவில் படத்தின் பூஜை நடைபெறவுள்ளது. அன்றைய தினம் இதுகுறித்த அறிவிப்பு இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago