ஊரடங்கில் பிறந்த தேவதை: ஸ்ரேயா பகிர்வு

By செய்திப்பிரிவு

கடந்த ஆண்டு ஊரடங்கின்போது தனக்குப் பெண் குழந்தை பிறந்ததாக நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ஸ்ரேயா 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஆண்ட்ரே கொஸ்சீவைத் திருமணம் செய்துகொண்டார். தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நகரத்தில் தனது கணவர் ஆண்ட்ரே கொஸ்சீவுடன் வசித்து வருகிறார்.

2020ஆம் ஆண்டு ஊரடங்கில் ஸ்ரேயா -ஆண்ட்ரே கொஸ்சீவ் தம்பதிக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், இந்தத் தகவலை இருவருமே தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடவில்லை.

இந்நிலையில் நேற்று (அக்.12) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குழந்தையுடன் இருக்கும் வீடியோவை ஸ்ரேயா வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''ஹலோ மக்களே! எங்களுக்கு மிக மோசமான அதே நேரத்தில் மிக அழகான ஒரு ஊரடங்கு கிடைத்தது. ஒட்டுமொத்த உலகமும் ஒரு மிகப்பெரிய துன்பத்தை எதிர்கொண்ட நேரத்தில் எங்கள் ஒட்டுமொத்த உலகமும் ஒரு சாகசம் நிறைந்த, மகிழ்ச்சியான ஒரு உலகமாக மாறிவிட்டது. எங்கள் வாழ்க்கையில் ஒரு தேவதை கிடைத்ததன் மூலம் நாங்கள் ஆசிர்வதிக்கப்பட்டோம். கடவுளுக்கு நாங்கள் மிகவும் நன்றிக் கடன் பட்டுள்ளோம்''.

இவ்வாறு ஸ்ரேயா கூறியுள்ளார்.

திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் ஸ்ரேயாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்