ரஜினி நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் டீஸர் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
'அண்ணாத்த' படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு. 'அண்ணாத்த அண்ணாத்த', 'சாரல் காற்றே' ஆகிய இரு பாடல்கள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் டீஸர் வெளியாகும் என்று தகவல் வெளியானாலும், அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாமல் இருந்தது.
தற்போது சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அக்டோபர் 14-ம் தேதி மாலை 6 மணிக்கு டீஸர் வெளியாகும் என்று 'அண்ணாத்த' படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதற்காகப் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. டீஸர் வெளியீடு குறித்த அறிவிப்பால், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
» பிரபல நடிகர் நெடுமுடி வேணு காலமானார்
» சமந்தா என் சகோதரி போன்றவர்; நாக சைதன்யாவின் அமைதி கவலையளிக்கிறது: சமந்தாவின் டிசைனர் பேட்டி
'அண்ணாத்த' படத்தில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக வெற்றி, இசையமைப்பாளராக இமான் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
11 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago