ஆர்.பால்கி - துல்கர் சல்மான் இணையும் சுப்: ரிவென்ஜ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்

By செய்திப்பிரிவு

ஆர்.பால்கி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து வரும் படத்துக்கு 'சுப்: ரிவென்ஜ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

'பேட் மேன்' படத்துக்குப் பிறகு, தனது அடுத்த படத்துக்காகத் தயாராகி வந்தார் ஆர்.பால்கி. கரோனா அச்சுறுத்தல் காரணத்தால் இதன் பணிகள் பாதிக்கப்பட்டன. கரோனா அச்சுறுத்தல் குறைந்தவுடன், தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பினை தொடங்கினார்.

இதில் நாயகனாக துல்கர் சல்மான் நடித்து வருகிறார். மேலும், சன்னி தியோல், பூஜா பட், ஸ்ரேயா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். தற்போது இந்தப் படத்துக்கு 'சுப்: ரிவென்ஜ் ஆஃப் தி ஆர்டிஸ்ட்' எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. முதன்முறையாக ஆர்.பால்கி இயக்கத்தில் உருவாகும் த்ரில்லர் படம் இதுவாகும்.

இந்தப் படத்தில் முதன்முறையாக பி.சி.ஸ்ரீராம் இல்லாமல் பணிபுரிந்துள்ளார் ஆர்.பால்கி. இதுவரை அவருடைய இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துக்குமே ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் தான். இதில் விஷால் சின்ஹா ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஆர்.பால்கி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பணிபுரியவுள்ளதாக பி.சி.ஸ்ரீராம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE