ஹிப் ஹாப் தமிழாவின் அடுத்த படம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஹிப் ஹாப் தமிழா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவுள்ளது.

இசையமைப்பாளராக வலம் வந்த ஹிப் ஹாப் தமிழா, 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'நட்பே துணை', 'நான் சிரித்தால்', 'சிவகுமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவ்' ஆகிய படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஹிப் ஹாப் தமிழா நடிக்கவுள்ள 6-வது படம் இன்று (அக்டோபர் 8) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 'மரகத நாணயம்' படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.கே சரவண் இயக்கவுள்ளார். பேன்டஸி த்ரில்லர் பாணியில் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தினை ஹிப் ஹாப் தமிழா முந்தைய 2 படங்களைத் தயாரித்துள்ள சத்யஜோதி நிறுவனமே தயாரிக்கவுள்ளது. முந்தைய படங்கள் போல் அல்லாமல் பெரும் பொருட்செலவில் இந்தப் படம் தயாராகிறது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மாதேஷ் மாணிக்கம், எடிட்டராக பிரசன்னா ஜி.கே, கலை இயக்குநராக ராகுல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர். தற்போது படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பைத் தொடங்கி 2022-ம் ஆண்டு வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்