பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 25-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'ராதே ஷ்யாம்', 'சலார்', 'ஆதிபுருஷ்', 'புரொஜக்ட் கே' உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் பிரபாஸ். இதில் 'ராதே ஷ்யாம்' திரைப்படம் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது. இதர படங்கள் அனைத்துமே வெவ்வேறு நிலையில் தயாரிப்பில் உள்ளன.
இந்தப் படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 25-வது படம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை 'அர்ஜுன் ரெட்டி' மற்றும் இதன் இந்தி ரீமேக்கான 'கபீர் சிங்' ஆகிய படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கவுள்ளார்.
பிரபாஸ் - சந்தீப் ரெட்டி வாங்கா கூட்டணி படத்துக்கு 'ஸ்பிரிட்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் தலைப்பு வடிவமைப்பைப் பார்க்கும்போது, இது காவல்துறையை மையப்படுத்திய படம் என்று தெரியவருகிறது. இதனைப் பெரும் பொருட்செலவில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் டி சீரிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன.
இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
23 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago