'அனிமல்' படத்தை முடித்துவிட்ட பிறகே பிரபாஸின் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.
பிரபாஸ் நடிப்பில் உருவாகும் 25-வது படத்தை இயக்கவுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா. டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு நாளை (அக்டோபர் 7) வெளியாகவுள்ளது.
முன்னதாக, ரன்பீர் கபூர் நடிக்கவுள்ள 'அனிமல்' படத்தை இயக்க ஒப்பந்தமானார் சந்தீப் ரெட்டி வாங்கா. இதன் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. டி-சீரிஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் பாபி தியோல், பரினிதி சோப்ரா, அனில் கபூர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
பிரபாஸ் 25 அறிவிப்பு வெளியாவதால், பலரும் 'அனிமல்' படம் கைவிடப்பட்டதாகக் கருதினார்கள். ஆனால், அந்தப் படம் கைவிடப்படவில்லை. 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படப்பிடிப்பைத் தொடங்கி, 6 மாதத்துக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளார் சந்தீப் ரெட்டி வாங்கா.
'அனிமல்' படத்தின் பணிகளை முழுமையாக முடித்துவிட்டே, பிரபாஸின் 25-வது படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையுமே டி-சீரிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago