பிரபல நடிகை லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்துகொண்டார்.
மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'மகேஷிண்டே பிரதிகாரம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் லிஜோமோல் ஜோஸ். தமிழில் சசி இயக்கத்தில் வெளியான 'சிவப்பு மஞ்சள் பிச்சை' படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் சித்தார்த்துக்கு மனைவியாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு அக்காவாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
இதனைத் தொடர்ந்து 'தீதும் நன்றும்' என்ற படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்தார். நவம்பர் 2-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ள 'ஜெய் பீம்' படத்தின் கதையோ லிஜோமோல் ஜோஸ் கதாபாத்திரத்தைச் சுற்றியே அமைக்கப்பட்டுள்ளது. இதனை தா.செ.ஞானவேல் இயக்க, சூர்யா நாயகனாக நடித்துள்ளார்.
பல்வேறு முன்னணிப் படங்களில் நடித்து வந்த லிஜோமோல் ஜோஸ் திடீரென்று திருமணம் செய்துகொண்டார். இவரது கணவர் பெயர் அருண் ஆண்டனி. இவர்களுடைய திருமணம் நேற்று (அக்டோபர் 4) கேரளாவில் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்றுள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.
» 2021 - 2022இல் என்னென்ன படங்கள் வெளியாகும்?- டிஸ்னி அதிகாரபூர்வ அறிவிப்பு
» 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' 2-ம் பாகம் எடுக்கவே கூடாது: சிவகார்த்திகேயன்
இந்தத் திருமணப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, அவருடன் நடித்த நடிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
16 hours ago