2021 - 2022இல் என்னென்ன படங்கள் வெளியாகும்?- டிஸ்னி அதிகாரபூர்வ அறிவிப்பு

By செய்திப்பிரிவு

இந்த வருடத்தில் மீதமுள்ள அடுத்த 2 மாதங்களிலும், அடுத்த வருடத்திலும் தங்கள் தயாரிப்பில் என்னென்ன திரைப்படங்கள் வெளியாகும் என்று டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டிஸ்னி தயாரிப்புகள் மட்டுமல்லாது, சமீபத்தில் டிஸ்னி விலைக்கு வாங்கிய ட்வெண்டீத் சென்சுரி ஃபாக்ஸின் தயாரிப்புகளும் (தற்போது 21ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ்) இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளன. இதில் ’அவதார்’ படத்தின் இரண்டாம் பாகமும் அடக்கம்.

கரோனா நெருக்கடி காரணமாக 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கரோனா பரவலுக்கு ஏற்றவாறு பலவிதமான ஊரடங்கு உத்தரவுகளும் அமலில் இருந்தன. இதனால் திரையரங்குகள் உட்படப் பல பொது இடங்கள் மூடப்பட்டன.

நடுவில் சில மாதங்கள் கழித்துத் திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. முழு அனுமதி இருந்த நாடுகளிலும் கரோனா அச்சம் காரணமாக மக்கள் திரையரங்குகள் போன்ற பொது இடங்களுக்கு வர அச்சப்பட்டிருந்தனர்.

தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீராகி பழைய நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. எனவே மீண்டும் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. தயாரிப்பு நிறுவனங்களும், கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக வெளியிடாமல் ஒத்தி வைத்திருந்த திரைப்படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளன.

கடந்த மாதத்தில் ’ஷாங் சி’, ’ஃப்ரீ கை’, ’ஜங்கிள் க்ரூஸ்’, ‘நோ டைம் டு டை’ உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்கள் இந்தியாவில் வெள்ளித்திரை வெளியீட்டைக் கண்டுள்ளன. தற்போது அடுத்த வருட இறுதி வரை, தங்கள் தயாரிப்பில் இந்தியாவில் வெளியாகவிருக்கும் முக்கியத் திரைப்படங்களின் பட்டியலை டிஸ்னி நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு:

அக்டோபர் 22 - தி லாஸ்ட் ட்யூல்
அக்டோபர் 29 - ரான்ஸ் கான் ராங்
நவம்பர் 5 - எடர்னல்ஸ் (ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்)
நவம்பர் 26 - என்கான்ட்டோ
டிசம்பர் 10 - வெஸ்ட் ஸைட் ஸ்டோரி
டிசம்பர் 24 - தி கிங்ஸ் மேன்

2022 அட்டவணை

பிப்ரவரி 11 - டெத் ஆன் தி நைல்
மார்ச் 11 - டர்னிங் ரெட்
மார்ச் 25 - டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்: மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ்
மே 6 - தோர்: லவ் அண்ட் தண்டர்
ஜூன் 17 - லைட் இயர்
ஜூலை 8 - பிளாக் பேந்தர்: வகாண்டா ஃபாரெவர்
அக்டோபர் 7 - பிளேட்
நவம்பர் 11 - தி மார்வல்ஸ்
டிசம்பர் 16 - அவதார் 2

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்