இதுதான் எஸ்பிபி எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நினைக்கவில்லை: ரஜினி வேதனை

By செய்திப்பிரிவு

மறைந்த எஸ்.பி.பி பாடிய கடைசிப் பாடல் குறித்து ரஜினி வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'அண்ணாத்த'. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 4-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்துள்ளார்.

'அண்ணாத்த' படத்திலிருந்து மறைந்த எஸ்.பி.பி பாடிய முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'அண்ணாத்த' என்று தொடங்கும் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பாடல் தொடர்பாக ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

"45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி 'அண்ணாத்த' படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின்போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்துகொண்டே இருப்பார்".

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்