'பீஸ்ட்' படத்தில் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை: கவின்

By செய்திப்பிரிவு

'பீஸ்ட்' படத்தில் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய், செல்வராகவன், பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தின் தொடக்க விழாவில் கவினும் கலந்துகொண்டார். இதனால் இதில் கவின் நடிக்கவுள்ளார் என்றெல்லாம் தகவல் பரவியது.

இது தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கவின் கூறியிருப்பதாவது:

"அந்தப் படத்தில் நான் எந்த விதத்திலும் பங்காற்றவில்லை என்பதே உண்மை. நான் பங்காற்றுவது பற்றி ஆரம்பத்தில் பேசியிருந்தார்கள். ஆனால், என் மற்ற படங்கள் தொடங்கப்பட்டதால் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

குழந்தைகள் விமானம் மேலே பறப்பதை வேடிக்கை பார்ப்பது போல, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படத்தின் படப்பிடிப்பைப் பார்க்க வேண்டும் என்பது எனது நீண்டநாள் கனவு. விஜய்யைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க முடியும் என்று நான் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. அதனால் எப்போதெல்லாம் சாத்தியப்படுகிறதோ அப்போதெல்லாம் 'பீஸ்ட்' படப்பிடிப்புக்குச் சென்று அங்கு நடக்கும் வேலைகளைக் கவனிப்பேன். இன்னும் எனக்கு அது ஆச்சரியத்தைத் தருகிறது".

இவ்வாறு கவின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

16 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்