'பதாய் ஹோ' தமிழ் ரீமேக் படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் தொடங்கப்பட்ட 'பதாய் ஹோ' தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பால், இதன் தென்னிந்திய மொழி ரீமேக் உரிமைகளைக் கைப்பற்றினார் போனி கபூர். இதில் முதலில் தமிழ் ரீமேக்கின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் தொடங்கப்பட்டது.

'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கிய ஆர்ஜே பாலாஜி - என்.ஜே.சரவணன் கூட்டணி இந்தப் படத்தை இயக்கி வந்தது. சரியாகத் திட்டமிட்டு 40 நாட்களில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டு சென்னை திரும்பிவிட்டது படக்குழு.

இதுகுறித்து ஆர்ஜே பாலாஜி தனது ட்விட்டர் பதிவில், "எனது அடுத்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது. 40 நாட்கள்!! அற்புதமான படப்பிடிப்பு அனுபவம் தந்த கடவுளுக்கு, என் அற்புதமான குழுவுக்கு, கோவை மக்களுக்கு நன்றி. 2022ன் மிகப்பெரிய குடும்பப் பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதற்கு 'வீட்ல விசேஷங்க' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் தீவிரமாகியுள்ளது படக்குழு.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

16 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

19 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்