'வலிமை' திரைப்படத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நாயகனாக நடிக்கும் திரைப்படம் உருவாகிறது. இதை போனி கபூரே தயாரிக்கிறார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் படம் 'வலிமை'. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்தின் முன்னோட்ட டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 2022ஆம் ஆண்டு பொங்கலுக்கு இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'வலிமை'க்குப் பிறகு அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தையும் போனி கபூர்தான் தயாரிப்பார் என்றும், ஹெச்.வினோத்தே இயக்குவார் என்றும் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. மேலும், இதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை பல மாதங்களுக்கு முன்னரே முடிந்ததாகவும் கூறப்பட்டது.
ஆனால், இதுகுறித்துப் படம் சம்பந்தப்பட்ட யாரும் உறுதியான தகவல்களைக் கூறவில்லை. இந்த நிலையில், சமீபத்தில் 'தி இந்து' ஆங்கிலம் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் போனி கபூர் இதை உறுதி செய்துள்ளார்.
» 'டிரைவிங் லைசென்ஸ்' பாலிவுட் ரீமேக்: அக்ஷய் குமார், இம்ரான் ஹாஷ்மி தேர்வு
» இந்தப் படக்குழுவின் அடுத்த படத்தை மூன்று மடங்கு பட்ஜெட்டில் தயாரிக்கிறேன்: ஞானவேல் ராஜா
"ஹெச் வினோத் மீது நம்பிக்கை வரக் காரணம் அவர் செய்யும் பணிதான். அவர் பேசமாட்டார். அவர் வேலையே அவரைப் பற்றிச் சொல்லிவிடும். தன்னைத் தன் படங்கள் மூலமே அவர் வெளிப்படுத்துகிறார். சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் சில கதைகளைச் சொல்ல வினோத்தை அஜித் மும்பைக்கு அனுப்பி வைத்தார்.
அப்போது என் மனைவி (மறைந்த நடிகை ஸ்ரீதேவி) வினோத்தோடு தமிழில் உரையாடினார். வினோத் கூறிய கதைகள் அவரை அதிகம் ஈர்த்தன. வினோத் தெளிவாக இருந்தார். அதனால்தான் எங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கிறது. ஏன் எனது அடுத்த படம் கூட அஜித் - வினோத் கூட்டணியோடு தான்" என்று போனி கபூர் பேசியுள்ளார்.
'சிறுத்தை' சிவாவைத் தொடர்ந்து தொடர்ச்சியாக 3 அஜித் படங்களை இயக்கும் இயக்குநர் ஹெச்.வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
4 mins ago
சினிமா
14 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago