சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா'. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக ஃபகத் பாசில் நடித்துள்ளார். நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். கடந்த மாத இறுதியில் படத்தில் ஃபகத் பாசிலின் கதாபாத்திரத் தோற்றத்தின் போஸ்டரைப் படக்குழு வெளியிட்டது. தற்போது இந்த மாத இறுதியில், ராஷ்மிகா கதாபாத்திரத்தின் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த போஸ்டரை வெளியிட்ட படத்தின் தயாரிப்பாளர்கள் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தம் ட்விட்டர் பக்கத்தில், "ஆக்ரோஷமான புஷ்பராஜின் இதயம் காதலைப் பார்த்தவுடன் உருகிவிடும்" என்று பதிவிட்டுள்ளது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்தப் படத்தின் ஒரு பாடல் ஏற்கெனவே வெளியாகி யூடியூபில் 5 கோடி பார்வைகளைத் தாண்டியுள்ளது. அடுத்ததாக ராஷ்மிகாவின் ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்துக்கான பாடலும் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.
Our fiercest #PushpaRaj's heart melts at the sight of his love ❤️
Meet @iamRashmika as #Srivalli
முக்கிய செய்திகள்
சினிமா
17 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago