நல்ல படம் அதற்குரிய இடத்தைப் பிடிக்கும்: 'பன்றிக்கு நன்றி சொல்லி' படம் குறித்து கேபிள் சங்கர் நம்பிக்கை

By செய்திப்பிரிவு

''நல்ல படம் அதற்குரிய இடத்தைப் பிடிக்கும்'' என்று 'பன்றிக்கு நன்றி சொல்லி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் கேபிள் சங்கர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதியவர்களின் கைவண்ணத்தில் ப்ளாக் ஹியூமர் வகையில் உருவாகியுள்ள படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி’. அறிமுக நடிகர் நிஷாந்த் நாயகனாக நடிக்க, சுரேன் விகாஷ் இசையமைக்க, விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவில் பாலா அரன் இயக்கியுள்ளார். விஜயன் இணைத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.

'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இயக்குநர்கள் பலரும் கலந்துகொண்டு வாழ்த்துகள் தெரிவித்தனர்.

இயக்குநர் நலன் குமாரசாமி

''இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படத்தின் டிரெய்லர் மட்டும் காட்டினார்கள். அப்போது பெரிதாக அவர்களுக்கு என்னால் உதவ முடியவில்லை. இந்தப் படத்தை ரிலீஸ் செய்யும் ஞானவேல் சாருக்கு நன்றி. நாங்கள் குறும்படத்தில் செய்ததை முழு நீளப் படமாக செய்யும் டெக்னாலஜி இப்போது வந்திருக்கிறது. ஆனால் இம்மாதிரி புதிய முயற்சியில் வெளியாகும் படங்கள் சரியான அறிமுகத்தைப் பெற வேண்டும். அம்மாதிரியான அறிமுகத்தை இப்படம் பெற்றது மகிழ்ச்சி'' என்றார்.

இயக்குநர் கேபிள் சங்கர்

''தம்பி நிஷாந்த் மூலம்தான் இந்தப் படத்தைப் பார்த்தேன். படத்தை வாங்க யாரும்
முன்வரவில்லை என்று சொன்னார்கள். பின் நான் இப்படத்தை சி.வி. குமாரிடம் அறிமுகப்படுத்தினேன். இப்போது இப்படம் பெரிய அளவில் ரிலீஸ் ஆவது மகிழ்ச்சி. ஒரு நல்ல படம் எடுத்தால் எப்படியாவது அதற்குரிய இடத்தை அப்படம் பெற்றுவிடும்,
என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம். இப்படம் 'சூது கவ்வும்' படத்தைப் போல் அனைவரையும் கவரும்'' என்றார்.

இயக்குநர் ஏஆர்கே சரவணன்

''இந்தப் படத்தை முன்னதாகவே பார்த்துவிட்டேன். படம் அட்டகாசமாக இருக்கும்,
இப்படம் எடுக்க நலன்தான் காரணம் என இயக்குநர் சொன்னார். என் படம் எடுக்கவும் அவர்தான் முன்னுதாரணமாக இருந்தார். இந்தப் படம் புதிய முகங்களின், கடுமையான உழைப்பில் உருவாகியுள்ளது. அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும் அனைவரும் பாருங்கள்'' என்றார்.

இயக்குநர் கல்யாண்

''இந்தப் படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. இந்தப்படம் சேர வேண்டிய இடத்தைச் சேர்ந்ததால் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். நலன் குமாரசாமி ஒரு படத்தைத் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும். படம் வெற்றி பெற வாழ்த்துகள்'' என்றார்.

இவ்வாறு இயக்குநர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 mins ago

சினிமா

21 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

50 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்