’வேதாளம்’ தெலுங்கு ரீமேக்: நாயகியாக தமன்னா ஒப்பந்தம்

By செய்திப்பிரிவு

'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவிக்கு நாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன், ராகுல் தேவ், கபீர் சிங், வித்யூலேகா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'வேதாளம்' 2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்தப் படத்தை இயக்கியிருந்தார் சிவா. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. ஏ.எம்.ரத்னம் தயாரித்து வெளியிட்டார்.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக்கிற்கு கடும் போட்டி நிலவியது. இறுதியாக 'வேதாளம்' தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளார். இதற்கான லுக் டெஸ்ட் உள்ளிட்ட பணிகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது. மெஹர் ரமேஷ் இயக்கவுள்ளார்.

இதில் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துவிட்டார்கள். மேலும், ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் யார் என்ற கேள்வி எழுந்தது.

தற்போது ஸ்ருதிஹாசன் கதாபாத்திரத்தில் தமன்னா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தினை அனில் சுக்ரா - ராம்சரண் - ஏ.எம்.ரத்னம் மூவரும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE