அஜித் நடித்துள்ள 'வலிமை' படத்தின் வெளியீட்டுத் தேதியை போனி கபூர் அறிவித்துள்ளார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளி வெளியீடு, கிறிஸ்துமஸ் வெளியீடு என்று பல்வேறு வெளியீட்டுத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இதனிடையே, 'வலிமை' படத்தின் வெளியீட்டுத் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர். 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக 'வலிமை' திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நாளை (செப்டம்பர் 23) 'வலிமை' படத்திலிருந்து சின்ன வீடியோ ஒன்றை வெளியிடவுள்ளது படக்குழு. பொங்கல் வெளியீடு என்பதால் சில மாதங்கள் கழித்தே டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது.
» யதார்த்த நடிகர்கள் மாஸ் படங்களில் சந்திக்கும் விபத்து: சீனுராமசாமி பகிர்வு
» தயாரிப்பாளர்கள் நலனுக்காக ஒன்றிணைந்த கூட்டுக்குழு உருவாக்கம்
'வலிமை' படத்தில் கார்த்திகேயா, ஹியூமா குரோஷி, யோகி பாபு, புகழ் உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago