நெல்சன் இயக்கவுள்ள புதிய படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'மான்ஸ்டர்'. பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் 2019-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, தனது அடுத்த படத்துக்கான பணிகளைத் தொடங்கினார் நெல்சன். ஆனால், அதன் பணிகள் அனைத்தும் கரோனா அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்து சகஜநிலைக்குத் திரும்பியுள்ள நிலையில், நெல்சன் தனது அடுத்த படத்தின் பணிகளில் மும்முரமாகியுள்ளார்.
தனது முந்தைய படம் போல் அல்லாமல் முழுக்க வித்தியாசமான கதைக்களத்தைத் தேர்வு செய்துள்ளார் நெல்சன். இதில் ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அவருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago