மீண்டும் நடிக்கும் சினேகா

By செய்திப்பிரிவு

'ஷாட் பூட் 3' படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்கு நடிகையாகத் திரும்பியுள்ளார் சினேகா.

'அச்சமுண்டு அச்சமுண்டு', 'நிபுணன்' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். திரையுலகிற்காக அருண் வைத்தியநாதன் எனப் பெயரை மாற்றியவர், தற்போது தனது நிஜப் பெயரான அருணாச்சலம் வைத்தியநாதன் என்றே பயன்படுத்துகிறார். முழுக்க குழந்தைகளைக் கொண்டு புதிய படமொன்றையும் அறிவித்துள்ளார்.

'ஷாட் பூட் 3' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் மற்றும் ட்ரெடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. இதில் வெங்கட் பிரபு மற்றும் சினேகா இருவரும் கணவன் - மனைவியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு, திரையுலகிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சினேகா. தற்போது அருணாச்சலம் வைத்தியநாதன் கூறிய கதையைக் கேட்டவுடனே நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். வெங்கட் பிரபு - சினேகாவுடன் நிறைய குழந்தைகளும் நடிக்கவுள்ளனர். யோகி பாபுவும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளராக சுதர்ஷன் ஸ்ரீனிவாசன், இசையமைப்பாளராக ராஜேஷ் வைத்யா, எடிட்டராக சூர்யா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

2 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

20 hours ago

மேலும்