இடியட் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழக முதல்வருக்கு ஆனந்த்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'இடியட்'. ராம்பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ரானி, ரவிமரியா, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 17-ம் தேதி வெளியாக இருந்த இந்தப் படம் தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் ஆனந்தராஜ் பேசியதாவது:
"ராம்பாலா மிக நல்ல மனிதர். அவர் ஒரு காமெடி கடல். அவரின் திறமையை யாராலும் திருட முடியாது. அவருடன் 'தில்லுக்கு துட்டு' படத்தில் இணைந்து பணியாற்றினேன். இரண்டில் நடிக்க முடியவில்லை. இப்போது இந்தப்படம் மிக நன்றாக வந்திருக்கிறது.
» ஜி.வி.பிரகாஷ் - கெளதம் மேனன் நடிக்கும் செல்ஃபி
» மக்கள் விரும்பினால் அரசியலைப் பற்றி யோசிப்பேன்: கங்கணா பேட்டி
தயாரிப்பாளர்களுக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். ஓடிடி யில் படத்தைக் கொடுத்துவிடும் இக்காலத்தில் தியேட்டரில் இப்படத்தை வெளியிட வேண்டும் என உறுதியாக இருந்ததற்கு நன்றி. திரையரங்க அனுபவம் என்பது மிகச்சிறப்பான ஒன்று அது ஆலயம் போன்றது. இந்தப் படத்தைத் திரையரங்கில் அனைவரும் கொண்டாடுவார்கள்.
மிர்ச்சி சிவா உடன் முதல்முறையாக நடித்திருக்கிறேன். அவர் படிப்படியாக வளர்ந்து முழு சந்திரமுகியாக மாறியிருக்கிறார். மிகச் சிறப்பாக நடித்துள்ளார். நிக்கி கல்ராணி என் தோழி. அவரும் நானும் இணைந்து நடித்த அனைத்து படங்களுமே ஹிட். இந்தப்படமும் ஜெயிக்கும்.
இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். இந்த மேடையில் தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். சிறு படங்களின் தேவைகளை நிவர்த்தி செய்து அவற்றை வாழ வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஆனந்த்ராஜ் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
14 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago