ஜி.வி.பிரகாஷ் - கெளதம் மேனன் நடிக்கும் செல்ஃபி

By செய்திப்பிரிவு

ஜி.வி.பிரகாஷ் மற்றும் கெளதம் மேனன் இணைந்து நடித்துள்ள படத்துக்கு 'செல்ஃபி' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.

'ஜெயில்', 'பேச்சிலர்', 'ஐங்கரன்', '4ஜி', 'இடிமுழக்கம்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் ஜி.வி.பிரகாஷ். மேலும் சில பெயரிடப்படாத படங்களிலும் கவனம் செலுத்தி வந்தார். இதில் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த மதிமாறனின் படமும் ஒன்றாகும்.

டிஜி பிலிம் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தினை தாணு வாங்கியுள்ளார். இதில் கெளதம் மேனன், வர்ஷா பொல்லம்மா, வாகை சந்திரசேகர், குணாநிதி, தொழிலதிபர் சாம் பால் உள்ளிட்ட பலர் ஜி.வி.பிரகாஷுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவுற்று, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது இந்தப் படத்துக்கு 'செல்ஃபி' எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை இயக்குநர் வெற்றிமாறன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். ஒளிப்பதிவாளராக விஷ்ணு ரங்கசாமி, இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ், எடிட்டராக எஸ்.இளையராஜா ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE