விஜய்யின் சாதிப் பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன்: எஸ்.ஏ.சந்திரசேகர் கொந்தளித்த பின்னணி

By செய்திப்பிரிவு

விஜய்யின் சாதிப் பெயர் கேட்டால் போராட்டத்தில் இறங்குவேன் என்று இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.

ஒயிட் லேம்ப் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அந்தோணிசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாயம்'. விஜய் விஷ்வா, சைனி, பொன்வண்ணன், போஸ் வெங்கட், சீதா, இளவரசு உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். சலீம் மற்றும் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு நாக உதயன் இசையமைத்துள்ளார்.

படிக்கும் மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசுவதால் நாயகன் வாழ்க்கையே எப்படி திசை மாறுகிறது என்பதை மையப்படுத்தி 'சாயம்' படம் உருவாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழா இன்று (செப்டம்பர் 11) காலை சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் எஸ்.ஏ.சி, ஆர்.வி.உதயகுமார், சாய்ரமணி, ஜாக்குவார் தங்கம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சி. பேசியதாவது:

"மாணவர்கள் மீது சாதிச் சாயம் பூசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. சமூகத்திற்குப் பயன்தரும் விதமான படங்களை எடுப்பவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். சாதியை ஒழிப்பதற்கு நாம் நமது வாழ்க்கையில் பிராக்டிகலாக என்ன செய்திருக்கிறோம்..?

என் மகன் விஜய்யைப் பள்ளியில் சேர்க்கும்போது விண்ணப்பத்தில் மதம், சாதி என்கிற இடத்தில் தமிழன் என்று குறிப்பிட்டேன். முதலில் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். பள்ளியையே மூடும் அளவுக்குப் போராட்டம் நடத்துவேன் எனக் கூறியதும், பின் அமைதியாக ஒப்புக்கொண்டனர். அப்போதிலிருந்து விஜய்யின் சான்றிதழில் சாதி என்கிற இடத்தில் தமிழன் என்றுதான் தொடர்ந்து வருகிறது.

சாதிக்கு நாம்தான் முக்கியத்துவம் கொடுக்கிறோம். நாம் நினைத்தால், இதுபோல பள்ளியில் சேர்க்கும்போதே சாதியைக் குறிப்பிடாமல் தவிர்த்தால் இன்னும் இருபது வருடங்களில் சாதி என்கிற ஒன்றே இல்லாமல் போய்விடும்.

எனது படத்தில் நடித்த அபிசரவணன் தற்போது விஜய் விஷ்வா எனப் பெயரை மாற்றிக்கொண்டுள்ளார். விஜய் என்று சொன்னாலே ஒரு அதிர்வு ஏற்படும். பாலிவுட் கதாசிரியர் சலீம் ஜாவேத் தனது கதையின் ஹீரோக்களுக்கு குறிப்பாக அமிதாப்பின் படங்களில் எப்போதுமே விஜய் என்றுதான் ஹீரோவுக்குப் பெயர் வைப்பார். அதேபோல நானும் எனது படங்களின் நாயகர்களுக்கு விஜய் என்றுதான் பெயர் வைப்பேன். அதனால்தான் எனது மகனுக்கும் விஜய் எனப் பெயர் வைத்தேன். விஜய் என்றாலே வெற்றி என்றுதான் அர்த்தம். அந்த வெற்றி இவரோடு ஒட்டிக்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு எஸ்.ஏ.சி. பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

18 hours ago

சினிமா

1 day ago

மேலும்