அரசியலுக்கு பதிலாகத் திரையில் நடிப்போம். அதனால் அரசியல் வேண்டாம் என்று வடிவேலு தெரிவித்தார்.
வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் பேசித் தீர்க்கப்பட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளார். முதலாவதாக சுராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதனை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
சுராஜ் - வடிவேலு இணையும் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் இன்று (செப்டம்பர் 10) நடைபெற்றது. இதில் வடிவேலு பேசி முடித்தவுடன், பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அவை பின்வருமாறு:
» விஜய் ஆண்டனிக்கு புகழாரம் சூட்டிய டி.சிவா
» திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்: கே.ராஜன் காட்டம்
2011-ல் லேசாக அரசியலில் கால் வைத்தீர்கள். ஏன் அரசியலை விட்டீர்கள். எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவீர்களா?
அரசியலுக்கு பதிலாக திரையில் நடிப்போம். மக்கள் இப்போது நீங்க நடிங்க வடிவேலு என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அது வேண்டாம். எதிர்காலம் என்றைக்கு வருகிறது என்று பார்ப்போம்.
முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தபோது என்ன பேசினீர்கள்?
என்னைப் பார்த்தவுடன் சீக்கிரம் படம் நடிங்க வடிவேலு என்று சொன்னார். கண்டிப்பாக உங்க ஆசீர்வாதம் இருக்கும் வரை எனக்கு ஒரு குறையும் இல்லண்ணே என்றேன். அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசினேன். குடும்பத்தைப் பற்றி எல்லாம் விசாரித்து அனுப்பினார். முதல்வரைப் பார்த்ததிலிருந்தே எனக்கு நல்ல நேரமாக இருந்தது.
தயாரிப்பாளர் சங்கமும் அப்புறமாகப் பேசி உங்களுக்கு ரெட் கார்டே போடவில்லை. ரெட் என்று சொன்னது பொய். வாய்மொழியில்தான் உங்களை நடிக்கவிடாமல் செய்துள்ளார்கள். நீங்கள் வாங்கப் பிரச்சினையைப் பேசி முடித்துவிடுவோம் என்றார்கள். அதற்குள் சுபாஷ்கரன் ஐயா வந்து பிரச்சினையை முடித்துவிட்டார்.
நீங்கள் நடிக்க வந்தவுடன், யாரேனும் நடிகர்கள் உங்களுடன் நடிக்க ஆசைப்பட்டு போன் செய்தார்களா? 4 படங்கள் நடிக்கப் போகிறேன் என்றீர்கள். எல்லாமே கதையின் நாயகனா?
நிறைய போன் வந்து கொண்டிருக்கிறது. எல்லாமே நல்ல கதைகளாக வந்துள்ளன. லாரன்ஸ் சார், அர்ஜுன் சார், சிவகார்த்திகேயன் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். 2 படங்கள் மட்டும் கதையின் நாயகனாக நடித்துவிட்டு, அப்புறம் ஃபுல்லா காமெடியன்தான்.
உங்களுக்குப் பிடித்த காமெடி நடிகர்கள்?
சந்திரபாபு, தங்கவேலு, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன் உள்ளிட்ட அனைவரையுமே பிடிக்கும்.
முக்கிய செய்திகள்
சினிமா
36 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago