'கோடியில் ஒருவன்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஆண்டனிக்கு புகழாரம் சூட்டினார் டி.சிவா.
செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கோடியில் ஒருவன்'. ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஆத்மிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். செப்டம்பர் 17-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இந்த விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா, விஜய் மில்டன் உள்ளிட்ட திரையுலகினர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள். இதில் தயாரிப்பாளர் டி.சிவா பேசியதாவது:
"ராஜா ,தனஞ்ஜெயன் ஆகியோர் எப்பொழுதுமே தனித்துவம் வாய்ந்தவர்களாகவும் திரைப்பட தொழில்நுட்ப குழுவிற்கு நம்பிக்கையானவர்களாகவும் இருக்கிறார்கள். விஜய் ஆண்டனி தொடர்ந்து திரைப்பட குழுவிற்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறார் .குறிப்பாக இயக்குநருக்கு அளித்து வருகிறார்.
» திரைத்துறையில் பலர் கூட்டுச் சதி செய்து தயாரிப்பாளரை அழிக்கிறார்கள்: கே.ராஜன் காட்டம்
» நாடி நரம்பு முறுக்க முறுக்க...: ’அண்ணாத்த’ மோஷன் போஸ்டர் வெளியீடு
நிவாஸ் கே பிரசன்னா மெலோடி பாடல்களில் கில்லாடி .சிறப்பான பாடல்களைக் கொடுத்துள்ளார். நடிகை சமந்தா போல ஆத்மிகாவும் தமிழ் சினிமாவில் வலம் வருவார். விஜய் ஆண்டனி ஒரு மனிதநேயமிக்க மனிதர் .குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் விஜயகாந்த்தைப் போல விஜய் ஆண்டனி. விஜயகாந்த் 52 புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தினார் .அதே வழியில்தான் விஜய் ஆண்டனியும் புதிய இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வருகிறார்"
இவ்வாறு டி.சிவா தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago