முழுக்க பெண் தொழில்நுட்பக் கலைஞர்களை மட்டுமே கொண்டு புதிய படமொன்று உருவாகவுள்ளது.
பெண்களை மையப்படுத்திய படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகின்றன. ஆனால், அவை பெரும்பாலும் ஆண் இயக்குநர்கள் இயக்கியதாகவே இருக்கும். தற்போது முழுக்க பெண் தொழில்நுட்பக் கலைஞர்களைக் கொண்டே புதிய படமொன்று உருவாகவுள்ளது.
ரூபி பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தினை தயாரிக்கவுள்ளது. இதில் பெண் இயக்குநர், பெண் ஒளிப்பதிவாளர், பெண் இசையமைப்பாளர் என பெண்கள் பணிபுரியும் கூட்டணியை வைத்தே தயாரிக்கிறார்.
அறிமுக இயக்குநர் பாக்யா இயக்கும் இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணி இசையமைக்கிறார். சந்தோஷ் சிவனிடம் உதவியாளராக பணிபுரிந்த சின்னு குருவில்லா ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஏற்கனவே மலையாளத்தில் சில படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
» அட்லியின் முயற்சி: ஒப்புக் கொள்வாரா விஜய்?
» சமரசம் செய்து கொள்ளாத திராவிட சிந்தனையாளர்: புலமைப்பித்தன் மறைவுக்கு சிவக்குமார் இரங்கல்
விரைவில் இந்தப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புடன் கூடிய போஸ்டர் வெளியிடப்படவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
18 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
12 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago