பிரபல நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா காலமானார்.
பாலிவுட்டின் பிரபல நடிகராக இருப்பவர் அக்ஷய் குமார். 1991ஆ ஆண்டு வெளியான ‘சவ்கந்த்’ திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் இந்தி சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். தமிழில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘2.0’ படத்தில் இவரது பக்ஷிராஜன் கதாபாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது. இறுதியாக ரஞ்சித் எம்.திவாரி இயக்கத்தில் ‘பெல்பாட்டம்’ படத்தில் நடித்திருந்தார்.
கடந்த திங்கள் (செப். 6) அன்று அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தாயார் அருணா பாட்டியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் மீண்டு வரவேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ரஞ்சித் எம்.திவாரி இயக்கி வரும் ‘சிண்ட்ரெல்லா’ படப்பிடிப்புக்காக லண்டனில் இருந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது தாயாரைப் பார்ப்பதற்காக மும்பை வந்து சேர்ந்தார்.
இந்நிலையில் இன்று அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா மருத்துவமனையில் காலமானார். இதை அக்ஷய் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
8 mins ago
சினிமா
2 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago