இந்தியன் ஐடல் இசை நிகழ்ச்சியின் போட்டியாளரான ஷண்முக ப்ரியாவை 'லைகர்' படத்தில் பாடவைத்து தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா.
இந்தியாவின் பிரபலமான ரியாலிட்டி போட்டி இசை நிகழ்ச்சிகளில் ஒன்று இந்தியன் ஐடல். இதன் 12-வது சீஸன் சமீபத்தில் நிறைவடைந்தது. இதில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஷண்முக ப்ரியா இறுதிக்கட்டம் வரை வந்தார். இவர் ஏற்கெனவே சரிகமபா கிட்ஸ் தெலுங்குப் போட்டி இசை நிகழ்ச்சியின் வெற்றியாளர். இது தவிர இன்னும் பல இசைப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
இந்நிலையில் இந்தியன் ஐடல் 12 நிகழ்ச்சியின் இறுதிக்கட்டப் பகுதி ஒன்றில் ஷண்முக ப்ரியாவுக்காக காணொலி ஒன்றைப் பகிர்ந்திருந்தார் நடிகர் விஜய் தேவரகொண்டா. அதில், “நீங்கள் ஜெயித்தாலும் சரி, தோற்றாலும் சரி, சிறப்பாக முயற்சி செய்யுங்கள். நான் உங்களை என் படத்தில் பாட வைக்கிறேன்” என்று வாக்குறுதி கொடுத்தார்.
இந்தியன் ஐடல் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் ஷண்முக ப்ரியா வெற்றி பெறவில்லையென்றாலும்கூட, தான் சொன்னதைப் போல, தான் நடித்துக் கொண்டிருக்கும் 'லைகர்' படத்தில் அவரைப் பாட வைத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.
» நடிகர் சுதீப் பிறந்த நாளுக்கு எருமையை பலி கொடுத்த ரசிகர்கள்: காவல்துறை நடவடிக்கை
» இயக்குநர் புகார்: தணிக்கைக்கு மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்
மேலும் ஷண்முக ப்ரியாவையும் அவரது அம்மாவையும் தனது வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, உரையாடி, பாராட்டியுள்ளார் விஜய் தேவரகொண்டா. இதுகுறித்த காணொலி ஒன்றை 'லைகர்' படக்குழு யூடியூபில் வெளியிட்டுள்ளது. ஷண்முக ப்ரியா பாடிய பாடல்களை இயக்குநர் பூரி ஜெகந்நாத், தயாரிப்பாளர் நடிகை சார்மியுடன் தானும் பார்த்ததாகவும், ப்ரியாவின் குரலுக்கு ஏற்ற பாடலைத் தர வேண்டும் என்று தாங்கள் பேசியதாகவும் விஜய் தேவரகொண்டா இதில் குறிப்பிட்டுள்ளார்.
தான் விஜய் தேவரகொண்டாவின் மிகப்பெரிய ரசிகை என்றும், அவரது இந்த ஆதரவைத் தான் எதிர்பார்க்கவில்லை என்றும் ஷண்முக ப்ரியா இந்தக் காணொலியில் பேசியுள்ளார். பாடல் பதிவில் அவர் பாடும் காட்சிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் உருவாகும் 'லைகர்', தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது. அனன்யா பாண்டே கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்துக்கு மணி சர்மா, தனிஷ்க் பாக்சி இருவரும் இசையமைக்கின்றனர். பூரி ஜெகந்நாத், நடிகை சார்மி, கரண் ஜோஹர், அபூர்வ மேத்தா உள்ளிட்டோர் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago