கார்த்தி படத்தில் நாயகியாகும் ஷங்கரின் மகள்

By செய்திப்பிரிவு

கார்த்தி - முத்தையா கூட்டணியில் உருவாகும் ‘விருமன்’ படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியாக அறிமுகமாகிறார்.

2015ஆம் ஆண்டு வெளியான ‘கொம்பன்’ படத்துக்குப் பிறகு கார்த்தி - முத்தையா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்துக்கு ‘விருமன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தில் கார்த்தியுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், சூரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை 2டி எண்டெர்டெய்ன் நிறுவனம் சார்பில் சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்நிலையில் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் என்று அழைக்கப்படும் ஷங்கரின் இளைய மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகிறார். அதிதி இடம்பெற்றுள்ள ‘விருமன்’ பட போஸ்டரை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் சூர்யா ‘அதிதி ஷங்கரை வரவேற்கிறேன்! நீ அனைவரது இதயங்களையும் வெல்லப் போகிறாய். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். உன் வரவு நல்வரவு ஆகுக’ என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு சென்னையில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

13 mins ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

20 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்