'சூரரைப் போற்று' பாடலுக்கு அமிதாப் பச்சனிடமிருந்து கிடைத்த பாராட்டால் மிகவும் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் சூர்யா.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகப் பணிபுரிந்தார். கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது.
இந்தப் படத்தின் காட்சியமைப்புகள், உருவாக்கப்பட்ட விதம், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்துத் தரப்பிலும் கொண்டாடப்பட்டது. சமீபத்தில் இந்தப் படத்தின் 'கையிலே ஆகாசம்' படத்தின் பாடல் வரிகள் மற்றும் இசைக்கு வெகுவாகத் தனது வலைப்பூவில் பாராட்டியிருந்தார் இந்தி திரையுலகின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன். (அமிதாப் பச்சன் பாராட்டுச் செய்தியை முழுமையாகப் படிக்க)
அமிதாப் பச்சன் பாராட்டால் மிகவும் மகிழ்ச்சியடைந்தது 'சூரரைப் போற்று' படக்குழு. இது தொடர்பாக சூர்யா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
"இதுபோன்ற தருணங்கள், இதுபோன்ற கனிவான வார்த்தைகள் அடங்கிய பாராட்டுகள், இதுபோன்ற அசாதரணமான தருணங்கள்தான் 'சூரரைப் போற்று' படத்துக்கான மிகச் சிறந்த வெகுமதிகள். நெகிழ்ந்துவிட்டேன். உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவை அமிதாப் பச்சன்".
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
13 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago