வரலட்சுமி நடிப்பில் உருவாகும் தத்வமசி

By செய்திப்பிரிவு

இஷான், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்துக்கு 'தத்வமசி' எனத் தலைப்பிட்டுள்ளனர்.

எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குநராக அறிமுகமாகிறார். தனது படத்துக்கு 'தத்வமசி' எனத் தலைப்பிட்டுள்ளார். இதில் இஷான், வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் பிரம்மாண்டமாகத் தயாராகவுள்ளது.

“நான் தான் அது” எனும் பொருளுடைய அத்வைதப் பாரம்பரியத்தில் இருக்கும் ஒரு சமஸ்கிருத மந்திரம் இதுவாகும். பண்டைய இந்து நூலான உபநிஷத்தில் இருக்கும் நான்கு மகா வாக்கியங்களில் தத்வமசி ஒன்றாகும். இது பிரம்மனுடன் ஆத்மாவின் ஒற்றுமையைக் குறிக்கப் பயன்படுகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் கூடுதல் தகவல்களை அளிக்கிறது. “மனிதகுல வரலாற்றில் இதுவரை இல்லாத சக்தி. எல்லையற்ற உணர்ச்சி. பழிவாங்கலின் உச்சத்திற்கு சாட்சியாக இருங்கள்” என்று மோஷன் போஸ்டரில் இடம்பெற்றுள்ள ஆங்கில வரிகள் கூறுகின்றன.

இந்தப் படத்தைப் பெரும் பொருட்செலவில் ராதாகிருஷ்ணா தெலு தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக ஷ்யாம் கே.நாயுடு, இசையமைப்பாளராக சாம் சி.எஸ். ஆகியோர் பணிபுரிகிறார்கள். இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளின் இயக்குநராக பீட்டர் ஹெய்ன் பணிபுரியவுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

37 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

7 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்