'பிசாசு 2' படப்பிடிப்பு நிறைவு

By செய்திப்பிரிவு

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வந்த 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.

மிஷ்கின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'பிசாசு 2'. ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, பூர்ணா, ராஜ்குமார் பிச்சுமணி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கார்த்திக் ராஜா இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானல், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்தது. அடர்ந்த காட்டுப் பகுதிகளில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கி வந்தார் மிஷ்கின்.

தற்போது, 'பிசாசு 2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பரில் திரைக்குக் கொண்டுவரப் படக்குழு முடிவு செய்துள்ளது.

'பிசாசு 2' படத்தில் கவுரவத் தோற்றத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளது. குறிப்பாகப் படப்பிடிப்பு நடைபெறாத அடர்ந்த காட்டுப் பகுதியில் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE