விஜய் ஆண்டனி நடிக்கும் ‘கோடியில் ஒருவன்’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய் ஆண்டனியின் நடிப்பில் 'கோடியில் ஒருவன்', 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2' உள்ளிட்ட பல படங்கள் தயாராகி வருகின்றன. இதில் சில படங்களின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளன.
இதில் 'கோடியில் ஒருவன்' படத்தை ‘மெட்ரோ’ இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, இன்ஃபினிட்டி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. கடந்த மே மாதமே வெளியாக வேண்டிய இப்படம் கரோனா காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது.
» அபிஷேக் பச்சனுக்கு பார்த்திபன் புகழாரம்
» இன்ஸ்டாகிராமில் இணைந்த ஜோதிகா: சில மணி நேரங்களில் 14 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்
தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளதால் திரையரங்குகள் 50% சதவீதப் பார்வையாளர்களுடன் செயல்படத் தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து ‘கோடியில் ஒருவன்’ புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காகப் புதிய போஸ்டர் ஒன்றையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதில் இப்படம் செப்.17ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago