கெளதம் மேனன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சிலம்பரசன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'வெந்து தணிந்தது காடு' படத்தை இயக்கி வருகிறார் கெளதம் மேனன். இதன் 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால், ஒப்பந்தமாக எதுவும் இன்னும் இறுதியாகவில்லை. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

தற்போது 'டான்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இதனைத் தொடர்ந்து அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அசோக் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார். இந்தப் படங்களை முடித்துவிட்டு, கெளதம் மேனன் படத்தை சிவகார்த்திகேயன் துவங்குவார் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE