டாம் க்ரூஸின் பிஎம்டபிள்யூ கார், விலையுயரந்த உடைமைகள் திருட்டு

By ஐஏஎன்எஸ்

’மிஷன் இம்பாஸிபிள்’ திரைப்படத்தின் அடுத்த பாகத்தின் படப்பிடிப்புக்காக பிரிட்டனில் தங்கியிருக்கும் ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ காரும், உடைமைகளும் திருடு போயின.

"ப்ரிமிங்கம் நகரில் டாம் தனது காரில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரது கார் திருடப்பட்டது. உள்ளே இருந்த அவரது உடைமைகளும் திருடப்பட்டன. அந்தக் கார் காவல்துறையால் மீட்கப்பட்டுவிட்டது. ஏனென்றால் அதில் ஜிபிஎஸ் கருவி உள்ளது. ஆனால் உள்ளே இருக்கும் உடைமைகள் அத்தனையும் திருடப்பட்டுவிட்டன.

பாதுகாப்புக் குழுவுக்கு இது மிகப்பெரிய தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்தக் காரை ஓட்டிக் கொண்டிருந்த ஓட்டுநர் பித்து பிடித்தது போல கத்திக் கொண்டிருந்தார். ஆனால் டாம் அளவுக்கு அவர் கத்தவில்லை" என்று இந்த சம்பவம் குறித்து அறிந்த ஒருவர் தி சன் நியூஸ்பேப்பரிடம் கூறியுள்ளார்.

சாவியில்லாத இந்தக் காரைத் திறக்க, திருடர்கள் உயர் தொழில்நுட்பம் ஒன்றைப் பயன்படுத்தியதாகக் கூறபப்டுகிறது. ஆனால் இந்தக் கார் மீட்கப்படுவதற்குள் பிஎம்டபியுள்யூ நிறுவனம், டாம் க்ரூஸுக்கு அதே போன்ற வேறொரு காரைத் தந்துவிட்டது.

இந்தச் சம்பவம் குறித்துப் பேசியிருக்கும் காவல்துறை செய்தித் தொடர்பாளர், "ப்ரிமிங்கம் சர்ச் தெருவுலிருந்து, செவ்வாய்கிழமை காலை ஒரு பிஎம்டபியுள்யூ எக்ஸ் 7 ரக கார் திருடப்பட்டதாக எங்களுக்குக் புகார் வந்தது. சில மணி நேரங்களிலேயே இந்தக் கார் சம்த்விக் பகுதியில் மீட்கப்பட்டது. கார் மீட்கப்பட்ட பகுதியிலிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விசாரணை இன்னும் முடியவில்லை" என்று கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE