வீரப்பன் குடும்பத்தினரின் வேண்டுகோளைத் தொடர்ந்து, யோகி பாபு படத்தின் தலைப்பை மாற்ற படக்குழு முடிவு செய்துள்ளது.
'ராட்சசி' பட இயக்குநர் கெளதம் ராஜ் மற்றும் பிரபாதீஸ் ஷாம்ஸ் ஆகியோர் இணைந்து கதை எழுத, அறிமுக இயக்குநர் யாசின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வீரப்பனின் கஜானா'. காடுகளின் பெருமையைத் திகைப்பு மற்றும் நகைச்சுவை கலந்து கூறும் படமாக உருவாகி வருகிறது.
இதில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன், ராஜேஷ், தேவா, பூஜா, ஜீவிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் யோகி பாபு யூடியூபராக நடித்துள்ளார். தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள யூடியூபர்களை எல்லாம் இந்தப் படத்தில் கிண்டல் செய்துள்ளார்.
தற்போது 'வீரப்பனின் கஜானா' என்ற பெயரைப் படக்குழுவினர் மாற்ற முடிவு செய்துள்ளனர். இந்தத் தலைப்பு தொடர்பாகப் படக்குழுவினரைத் தொடர்புகொண்டு பேசிய மறைந்த வீரப்பன் குடும்பத்தார், வீரப்பன் என்ற பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்றுப் படக்குழுவினர் 'வீரப்பனின் கஜானா' என்ற தலைப்பை மாற்ற முடிவு செய்துள்ளனர்.
எனவே, இப்படத்தின் புதிய தலைப்பை விரைவில் அறிவிக்கவுள்ளது படக்குழு.
முக்கிய செய்திகள்
சினிமா
2 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
11 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago