'லாபம்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவான 'லாபம்' படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் 'லாபம்'. டி.இமான் இசையமைக்க, ஆறுமுககுமார், விஜய் சேதுபதி இருவரும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

எஸ்.பி.ஜனநாதன் விட்டுச் சென்ற இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் அவருடைய உதவி இயக்குநர்கள் முடித்துவிட்டார்கள். இதனால் படமும் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. ஓடிடி வெளியீட்டுக்குப் பேச்சுவார்த்தை நடத்தினாலும், திரையரங்குகள் திறக்கும் சூழல் உருவானதால் காத்திருந்தது படக்குழு.

தற்போது தமிழகத்தில் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து 'லாபம்' படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்து ஆலோசனை நடத்தியது படக்குழு. இறுதியாக செப்டம்பர் 9-ம் தேதி 'லாபம்' வெளியாகும் என்று புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் உணவு அரசியல் உள்ளிட்ட புரட்சிகரமான விஷயங்கள் பேசப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

12 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

23 hours ago

மேலும்