கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள அடுத்த படத்தின் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தனுஷ், மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாறன்' படத்தை இயக்கி வருகிறார் கார்த்திக் நரேன். சத்யஜோதி நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
'மாறன்' படத்தையடுத்து, தனது அடுத்த படத்தைத் திட்டமிட்டுவிட்டார் கார்த்திக் நரேன். நீண்ட நாட்களாகத் தயாரிப்பிலிருந்து விலகியிருந்த ஐங்கரன் நிறுவனம், மீண்டும் கார்த்திக் நரேன் இயக்கவுள்ள படத்தின் மூலம் தயாரிப்பில் இறங்குகிறது.
இந்தப் படத்தில் நாயகனாக நடிக்க அதர்வாவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது படக்குழு. 'மாறன்' படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, அதர்வா படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் கார்த்திக் நரேன். இந்தப் புதிய கூட்டணி தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago