மெஹெர் ரமேஷ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிக்கும் புதிய படத்துக்கு ‘போலா ஷங்கர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
‘பில்லா’, ‘சக்தி’, ‘ஷேடோ’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மெஹெர் ரமேஷ். தற்போது முதன்முறையாக சிரஞ்சீவியை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். இப்படத்துக்கு ‘போலா ஷங்கர்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தை ராமபிரம்மம் சுங்காரா தயாரிக்கிறார்.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் போஸ்டரை சிரஞ்சீவியின் பிறந்தநாளான நேற்று (22.08.21) படக்குழுவினர் வெளியிட்டனர்.
இப்படத்தின் டைட்டிலுக்கான மோஷன் டீசரை நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் ‘இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சிரஞ்சீவி. என்னுடைய அருமை நண்பர் மெஹெர் ரமேஷின் இயக்கத்திலும், எனக்கு பிடித்த தயாரிப்பாளர் ராம பிரம்மம் சுங்காராவின் தயாரிப்பிலும் உருவாகும் உங்கள் படத்தின் டைட்டிலை வெளீடுவதில் பெருமை அடைகிறேன். வரும் ஆண்டு உங்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும், வெற்றியையும் கொடுக்கட்டும், வாழ்த்துகள் சார்’ என்று குறிப்பிட்டுள்ளார்,
இந்த வீடியோவை ட்விட்டரில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் உருவாகும் 'லூசிஃபர்' ரீமேக்கில் சிரஞ்சீவி நாயகனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
14 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
13 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
15 hours ago
சினிமா
16 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
18 hours ago