விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் முதல் பார்வை போஸ்டரும், தலைப்பும் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
'பொன்னியின் செல்வன்', 'கோப்ரா' உள்ளிட்ட படங்களுக்கு முன்னதாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 'சீயான் 60' என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
லலித் குமார் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் சிம்ரன், வாணி போஜன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் விக்ரமுடன் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மேலும் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் என கார்த்திக் சுப்பராஜின் வழக்கமான கூட்டணி தொடர்கிறது.
ஆகஸ்ட் 20, வெள்ளிக்கிழமை மாலை இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டரும், தலைப்பும் வெளியிடப்பட்டுள்ளது. 'மகான்' என்று இந்தப் படத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளது. விக்ரம் பைக்கில் வருவது போலவும், அவர் தலையில் கொம்பு, பின்னால் பல கைகள் என இந்தப் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது லலித் குமார் தயாரிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' படத்தில் விக்ரம் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
சினிமா
5 hours ago
சினிமா
5 hours ago
சினிமா
7 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago