நெட்ஃப்ளிக்ஸ் தொடரில் அறிமுகமாகும் ஷாரூக் கான் மகள்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் மிகவும் பிரபலமான ‘ஆர்ச்சீஸ்’ காமிக்ஸின் ‘பெட்டி அண்ட் வெரோனிகா’ வெப் தொடராக உருவாகவுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தயாரிக்கவுள்ள இத்தொடரை ஸோயா அக்தர் இயக்கவுள்ளார். இத்தொடரின் மூலம் நடிகர் ஷாரூக் கானின் மகள் சுஹானா கான் மற்றும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் இருவரும் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளனர்.

நீண்ட நாட்களாகவே சுஹானா மற்றும் குஷி இருவரும் பாலிவுட்டில் அறிமுகமாவது குறித்து செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால் அவர்களை அறிமுகப்படுத்தப் போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இயக்குநர் கரண் ஜோஹர் அவர்களை அறிமுகப்படுத்தவுள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது ஸோயா அக்தர் அவர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தவுள்ளார்.

மராத்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘சாய்ராத்’ படத்தின் இந்தி ரீமேக்கில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரை கரண் ஜோஹர் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப் சீரிஸ் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. மேலும் சுஹானா, குஷி ஆகியோருடன் சைஃப் அலிகானின் மகன் இப்ராஹீமும் இத்தொடரில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 min ago

சினிமா

16 mins ago

சினிமா

29 mins ago

சினிமா

40 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

23 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்