இந்தியில் விஜய் சேதுபதி நடிக்கும் மவுனப்படம்

By செய்திப்பிரிவு

இந்தியில் மவுனப் படம் ஒன்றில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இப்படம் தவிர்த்து இந்தியில் ‘தி ஃபேமிலி மேன்’ இயக்குநர்களான ராஜ் -டிகே இயக்கி வரும் ஒரு வெப் சீரிஸ், மாநகரம் இந்தி ரீமேக்கான ‘மும்பைகார்’ ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்தியில் மவுனப் படம் ஒன்றில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு ‘காந்தி டாக்ஸ்’ (Gandhi Talks) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

இந்தியில் ‘காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் ஒப்பந்தமாகியுள்ளேன். அதில் எனக்கு வசனங்களே கிடையாது. அது ஒரு மவுனப்படம். நான் தற்போது முன்பை விட நன்றாக இந்தி பேசுகிறேன். ராஜ் -டிகே இயக்கும் வெப் சீரிஸ் மற்றும் சந்தோஷ் சிவன் இயக்கும் ‘மும்பைகார்’ படங்களுக்காக நான் இந்தி சரளமாக பேச கற்று வருகிறேன்.

ஒரு நடிகரின் வார்த்தையை விட அவரது மவுனமே நிறைய பேசவேண்டும் என்று நான் நம்புகிறேன். என்னை பொறுத்தவரை அதுவே உண்மை. உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலமே வார்த்தைகளை உணர முடியும். நான் பேசாமல் இருக்கும்போதுதான் என்னுடைய உணர்வுகள் வெளிப்படுகின்றன.

இவ்வாறு விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

கிஷோர் பாண்டுரங் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் ஹைதாரி ஒப்பந்தமாகியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

13 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

14 hours ago

சினிமா

15 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

17 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

21 hours ago

சினிமா

22 hours ago

மேலும்