'பதாய் ஹோ' படத்தின் தமிழ் ரீமேக்கை ஒரே கட்டமாக முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
அமித் ரவீந்திரநாத் ஷர்மா இயக்கத்தில் வெளியான பாலிவுட் படம் ‘பதாய் ஹோ’. ஆயுஷ்மான் குரானா, நீனா குப்தா, கஜ்ராஜ் ராவ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். 2018ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக் உரிமையை போனி கபூர் கைப்பற்றினார்.
இதன் தமிழ் ரீமேக் பணிகள் முதலில் தொடங்கப்பட்டன. இதனை 'மூக்குத்தி அம்மன்' படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி - என்.ஜே.சரவணன் கூட்டணி இயக்கவுள்ளது. இதில் நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி, நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளனர். மேலும் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.
இந்தப் படத்துக்கு 'வீட்ல விசேஷங்க' எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்தத் தலைப்புக்காக பாக்யராஜிடம் உரிய அனுமதியும் பெற்றுள்ளனர். இதன் படப்பிடிப்பு தொடங்குவதற்காகப் படக்குழு ஆயத்தமாகி வந்தது. தற்போது கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. ஒரே கட்டமாக ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
44 mins ago
சினிமா
5 hours ago
சினிமா
6 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago