சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக பாடகர் அதிரடி முடிவு செய்துள்ளார்.
விஜய் டிவியில் மிகவும் வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 7 சீசன்கள் முடிவுற்று, 8 சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டவர்கள் மற்றும் வெற்றி பெற்றவர்கள் பலரும் திரையுலகில் பாடகர்களாக வலம் வருகிறார்கள்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் 8 சீசனுக்கு அனுராதா ஸ்ரீராம், எஸ்.பி.சரண் மற்றும் பென்னி தயால் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியிலிருந்து ஸ்ரீதர் சேனா என்ற போட்டியாளர் வெளியேற்றப்பட்டுள்ளார். இது பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இது தொடர்பாக பலரும் நடுவர்களைக் கடுமையாகச் சாடி பதிவிட்டு வந்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடுவர்களில் ஒருவரான பென்னி தயால் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருப்பதாவது:
"இனி நான் சூப்பர் சிங்கர் 8 தொடர்பாக எதையும் பதிவிட மாட்டேன். என்னால் அத்தனை வெறுப்பைக் கக்கும் செய்திகளைத் தாங்க முடியவில்லை. நீங்கள் இதுவரை காட்டிய அத்தனை அன்புக்கும் நன்றி. நானும் ஒரு மனிதன் தான். போதும். நன்றி. நிகழ்ச்சியின் அடுத்த சீஸனில் உங்களைப் பார்க்க மாட்டேன்"
இவ்வாறு பென்னி தயால் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
14 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
17 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
19 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago