பாலா இயக்கத்தில் அதர்வா?

By செய்திப்பிரிவு

சூர்யா தயாரிப்பில் பாலா இயக்கவுள்ள புதிய படத்தின் நாயகனாக அதர்வா நடிக்கவுள்ளார்.

2018-ம் ஆண்டு வெளியான 'நாச்சியார்' படத்துக்குப் பிறகு பாலா இயக்கத்தில் இதுவரை எந்தவொரு படமும் வெளியாகவில்லை. அவருடைய 'வர்மா' திரைப்படம் தயாரிப்பாளருடன் ஏற்பட்ட மோதலால் திரையரங்கில் வெளியிடப்படாமல் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது.

தற்போது தனது அடுத்த படத்துக்காக தயாராகிவிட்டார் பாலா. இந்தப் படத்தினை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்காக முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் நாயகனாக நடிக்கவுள்ளது யார் என்பது தெரியாமலேயே இருந்தது.

இதில் அதர்வா நாயகனாக நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. 'பரதேசி' படத்துக்குப் பிறகு மீண்டும் பாலா - அதர்வா இருவரும் இணைந்து இந்தப் படத்தில் பணிபுரியவுள்ளார்கள். இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பாலசுப்பிரமணியம் பணிபுரியவுள்ளார்.

தற்போது அதர்வாவுடன் நடிக்கவுள்ள நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்டவை தேர்வு நடைபெற்று வந்தன. விரைவில் இந்தப் படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு, படப்பிடிப்பு தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்