கதிர் இயக்கத்தில் கிஷோர்

By செய்திப்பிரிவு

கதிர் இயக்கவுள்ள புதிய படத்தில் அறிமுக நாயகன் கிஷோர் நடிக்கவுள்ளார்.

'இதயம்', 'காதல் தேசம்', 'காதலர் தினம்' உள்ளிட்ட வரவேற்புப் பெற்ற படங்களை இயக்கியவர் கதிர். இந்தப் படங்கள் அனைத்தும் இப்போதும் இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. கடைசியாக 2016-ம் ஆண்டு 'நான் லவ் ட்ராக்' என்ற கன்னடப் படத்தை இயக்கியிருந்தார்.

தமிழில் 2002-ம் ஆண்டு வெளியான 'காதல் வைரஸ்' படத்தை தயாரித்து இயக்கியிருந்தார் கதிர். இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது மீண்டும் தமிழில் புதிய படமொன்றை இயக்கவுள்ளார் கதிர்.

இந்தப் படத்தின் நாயகனாக புதுமுகம் கிஷோர் நடிக்கவுள்ளார். ஆர்.கே இண்டர்நேஷனல் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. தற்போது கிஷோருடன் நடிக்கும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

8 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

சினிமா

12 hours ago

மேலும்