இந்தியில் வெப் சீரிஸ் பாணியில் லூசிஃபர்

By செய்திப்பிரிவு

இந்தியில் வெப் சீரிஸ் பாணியில் 'லூசிஃபர்' படத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் ப்ரித்விராஜ்.

மலையாளத்தில் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'லூசிஃபர்'. இதில் விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், ப்ரித்விராஜ் உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ப்ரித்விராஜ். மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்தியது 'லூசிஃபர்'.

இந்தப் படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜெயம் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது.

இந்நிலையில், 'லூசிஃபர்' படத்தை இந்தியில் வெப் சீரிஸாக எடுக்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார் ப்ரித்விராஜ். 8 எபிசோட்களாக இந்தப் படத்தின் கதையை உருவாக்கவுள்ளார். இதன் மூலம் இந்தியிலும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். இந்த வெப் சீரிஸ் எந்த ஓடிடியில் வெளியாகும் என்பதை ப்ரித்விராஜ் தெரிவிக்கவில்லை.

நாளை (ஆகஸ்ட் 11) ப்ரித்விராஜ் தயாரித்து, நடித்துள்ள 'குருதி' படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதற்காக அளித்த பேட்டியில் 'லூசிஃபர்' வெப் சீரிஸ் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், 'லூசிஃபர்' படத்தின் 2-ம் பாகமான 'எம்புரான்' படமும் மலையாளத்தில் உருவாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

7 hours ago

சினிமா

22 hours ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

சினிமா

1 day ago

மேலும்