மகேஷ் பாபு நடித்துவரும் 'சர்காரு வாரி பாட்டா' பட டீஸர் இணையத்தில் லீக் ஆனதால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. இதில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தை மகேஷ் பாபு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. கரோனா அச்சுறுத்தலால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. தற்போது இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு 'சர்காரு வாரி பாட்டா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டபடக்குழு. அதில் 2022-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியீடு எனவும் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று (ஆக. 09) மகேஷ் பாபு பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டீஸரை காலையில் 9:09 மணிக்கு படகுழு வெளியிட திட்டமிட்டிருந்தது. ஆனால், நேற்று இணையத்தில் டீஸர் லீக்காகிவிட்டது. இதனால் படக்குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணியளவில் அதிகாரபூர்வமாகவே டீஸரை வெளியிட்டுவிட்டது படக்குழு.
» விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன்?
» 'பீஸ்ட்' அப்டேட்: விஜய்யுடன் நடிக்கும் நடிகர்கள் பட்டியல் வெளியீடு
முக்கிய செய்திகள்
சினிமா
49 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
8 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
9 hours ago
சினிமா
10 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago
சினிமா
20 hours ago