‘தி சூசைட் ஸ்குவாட்’ படத்தை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து ஜான் சீனா பகிர்ந்துள்ளார்.
டிசி காமிக்ஸின் ‘தி சூசைட் ஸ்குவாட்’ படம் கடந்த ஜூலை 30ஆம் தேதி லண்டன் திரையரங்குகளில் வெளியானது. பின்னர் கடந்த வியாழன் (ஆகஸ்ட் 05) அமெரிக்க திரையரங்குகளிலும் ஹெபிஓ மேக்ஸ் ஓடிடி தளத்திலும் ஒரே நாளில் வெளியானது. ஜேம்ஸ் கன் இயக்கியுள்ள இப்படத்தில் ஜான் சீனா, மார்காட் ராபி, பீட் டேவிட்சன், இத்ரிஸ் எல்பா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து ஜான் சீனா கூறியிருப்பதாவது:
ஜேம்ஸ் கன் 100 சதவீத திறமைசாலி. நான் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரது பணியையும், அவரது கதைசொல்லல் முறையையும் மதிக்கிறேன். ‘கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி’ படத்திலேயே நான் அவரது ரசிகனாகி விட்டேன். இப்படத்தில் ஒப்பந்தமாவதற்கு முன்பே நான் அவரை சந்தித்து அவரது கதைசொல்லல் முறையை புரிந்து கொள்ள விரும்பினேன்.
அவர் எடுப்பது ஒரு சூப்பர்ஹீரோ படமா அல்லது போர் பின்னணியைக் கொண்ட படமா, காமெடி படமா என்றெல்லாம் எனக்கு தெரியாது. ‘தி சூசைட் ஸ்குவாட்’ படம் அநேகமாக மேற்சொன்ன மூன்று பிரிவிலும் வரும் என்று அவர் கூறினார். தனது கனவை நனவாக்க உதவும் மக்களை அவர் தேடிக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
சினிமா
7 mins ago
சினிமா
28 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
சினிமா
18 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
21 hours ago
சினிமா
22 hours ago
சினிமா
23 hours ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago
சினிமா
1 day ago